தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு.! ஷாக் வீடியோ.!

தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு.! ஷாக் வீடியோ.!bjp-leader-taacked-in-tv-show

ஆந்திராவில் ஒரு தனியார் செய்தித்தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணுவர்தன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரலை விவாதத்தில் பாஜக சார்பில் களமிறங்கிய மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் வழக்கம்போல் அனைவரையும் பேச விடாமல் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நேரலை விவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் பாஜகவின் விஷ்ணுவர்தன் மற்றும் அமராவதி பரிரக்‌ஷனா சமிதி இணைச் செயற்குழு உறுப்பினரான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென தனது காலில் இருந்த செருப்பை கலட்டிய ஸ்ரீநிவாச ராவ் திடீரென செருப்பை விஷ்ணுவர்தன் மீது வீசியுள்ளார். 

உடனடியாக நேரலை நிறுத்தப்பட்டது. தெலுங்கு செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப் பட்ட இந்த விவாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நடவடிக்கைக்கு பாஜக நிர்வாகிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.