எனக்கு இழைக்கப்பட்டது பெரிய அநீதி!.. அச்சமின்றி நிம்மதியோடு வாழும் உரிமையை திருப்பி கொடுங்கள்: பிஸ்கில் பானு.!

எனக்கு இழைக்கப்பட்டது பெரிய அநீதி!.. அச்சமின்றி நிம்மதியோடு வாழும் உரிமையை திருப்பி கொடுங்கள்: பிஸ்கில் பானு.!


Biskil Banu says Give me back the right to live in peace without fear of great injustice done to me

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு ஏற்பட்ட கலவரத்தில், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 1 குழந்தை உட்பட  7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்த நடந்த வழக்கு விசாரணையில், அவர்கள் 11 பேருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்தது.

குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானு முதல் முறையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-

எனது குடும்பத்தையும், எனது வாழ்க்கையையும் சீரழித்த 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட செய்தியை நான் அறிந்தபோது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதிர்ச்சி என்னை மீண்டும் தாக்கியது. எனக்கான நீதி செத்துவிட்டதா? நீதிமன்றங்களை நான் நம்பினேன். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, என்னிடமிருந்து என் அமைதியைப் பறித்ததோடு நீதியின் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை அசைத்துவிட்டது.

எனக்கு இழைக்கப்பட்டது பெரிய அநீதி. இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன்பு, எனது பாதுகாப்பை பற்றி யாரும் யோசிக்கவில்லை. தயவுசெய்து இந்த முடிவை மாற்றுங்கள் என்று குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அச்சமின்றி நிம்மதியுடன் வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.