என்ன நடந்தது? ஓடும் ரயிலில் திருடனை தொங்கவிட்ட பயணிகள்.. வைரல் வீடியோ..



Bihar thief pankaj hanged on running train viral video

பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் ரயிலில் தொங்கவிட்டு கூட்டிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பீகார் மாநிலம் சஹேபூர் ரயில் நிலையத்திற்கு பெகுசராய் பயணிகள் ரயில் வந்துள்ளளது. அப்போது ரயிலில் இருந்த பயணிகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த பங்கஜ் என்ற இளைஞர், ரயில் புறப்படும்போது திடீரென தனது கையை ஜன்னல் வழியாக விட்டு ரயில் பயணி ஒருவரின் செல்போனை பிடுங்க முயற்சித்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட ரயில் பயணி பங்கஜ்ஜின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் பங்கஜ்ஜால் தனது கைகளை வெளிய எடுக்க முடியவில்லை. அதேநேரம் ரயிலும் அங்கிருந்து புறப்பட, பொதுமக்கள் மேலும் சிலர் சேர்ந்து பங்கஜ்ஜின் கைகளை பிடித்துக்கொண்டனர்.

இதனால் ரயிலில் தொங்கியபடியே பங்கஜ் பயணித்துள்ளார். எங்கே தான் விழுந்திடுவோமோ என்ற பயத்தில் மற்றொரு கையையும் ரயில் உள்ளே விட்டபடி ரயில் பயணிகளிடம் பங்கஜ் கெஞ்சியபடி பயணித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.