இந்தியா

செல்போனில் மும்மர பேச்சு.. திறந்துகிடந்த பாதாளசாக்கடையில் தவறி விழுந்த பெண்.. பகீர் வீடியோ வைரல்.!

Summary:

செல்போனில் மும்மர பேச்சு.. திறந்துகிடந்த பாதாளசாக்கடையில் தவறி விழுந்த பெண்.. பகீர் வீடியோ வைரல்.!

சாலையை கவனிக்காமல் மொபைலில் பேசியபடி சென்ற பெண்மணி பாதாளசாக்கடை துளையில் விழுந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் பிரதான நகரில், பெண்மணி கடைக்கு வந்துள்ளார். இவர் செல்போனில் பேசியபடி இருந்த நிலையில், அவருக்கு முன்புறம் ஆட்டோ அவரை கடந்து சென்றது.

ஆட்டோ நின்றுகொண்டு இருந்த இடத்தில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் இருந்த நிலையில், அதனை கவனிக்காத பெண்மணி செல்போனில் பேசியவாறு 2 அடி முன்னிலையில் செல்கிறார். 

அப்போது, அவர் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயரத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.


Advertisement