செங்கல் சூளையில் திடீர் வெடி விபத்து.. உரிமையாளர் உட்பட 6 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
செங்கல் சூளையில் திடீர் வெடி விபத்து.. உரிமையாளர் உட்பட 6 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

செங்கல் சூளையில் இருக்கும் சிம்னி வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், ராம்கர்வா பகுதியில் செங்கல் சூளையானது செயல்பட்டு வருகிறது. இன்று செங்கல் சூளையில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, மாலை நேரத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறினார் போல பயங்கர சப்தம் கேட்டுள்ளது. சிம்னி வெடித்து தீப்பற்றியும் இருந்துள்ளது. சில ஊழியர்கள் அங்கிருந்து அவசர கதியில் வெளியேறினாலும், இடிபாடுகளில் 20 பேர் வரை சிக்கிக்கொண்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த செங்கல் சூளையின் உரிமையாளர் உட்பட 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.
மேலும், காயமடைந்து இருந்த 10 பேரின் உடல் மீட்கப்பட்டு, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.