பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
கள்ளக்காதலுக்கு எதிராக இருந்த கணவர் ஆணுறுப்பு நசுக்கி கொலை; மனைவி, ஆண் நண்பர் வெறிச்செயல்.!
பீகார் மாநிலத்தில் உள்ள சாம்பாரான் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரின் மனைவி பிரியங்கா. தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
பிரியங்காவின் மைத்துனர் சம்பு பிரசாத். இவருக்கும், பிரியங்காவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் ஜோடியின் மோகத்தால் கணவர் கொலை:
ராஜேஷுக்கு இந்த விவகாரம் தெரியவந்து, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார். ஆனால், இருவரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே, ஏப்ரல் 26 ம் தேதி ராஜேஷ் ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டார்.
அவரின் ஆணுறுப்பை செங்கல்லால் அடித்து கொலை செய்தவாறு சடலம் மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் கள்ளக்காதலுக்கு எதிராக இருந்த கணவர் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பிரியங்கா மற்றும் சம்பு பிரசாத்தை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.