BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பெரும் சோகம்..6 பேரை காவு வாங்கி லோடு லாரி.. போலீஸ் விசாரணை.!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள சோன்காம்ப் அருகே நேற்று முன்தினம் இரவு காரானது சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 7 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சாலையின் எதிர் புறத்திலிருந்து சோயா பீனை ஏற்றிக்கொண்டு லோடு லாரி ஒன்று வந்துள்ளது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த லாரியானது எதிர் திசையில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்களில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மற்ற 3 பேர் மேல் சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.