கொலை நடக்கும் போது போலீஸ் செய்யுற வேலையா இது? பழிவாங்கும் எண்ணத்தில் அரங்கேறிய கொடூர கொலை..! அதிர்ச்சி வீடியோ..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஜே.பி.நகர் பகுதியில் பிரபல ரவுடி ராஜு என்கிற 'ஹல்முர்கா' பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட, சம்பவ இடத்திற்கு அருகே வந்த காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தப்பி சென்றதாக கூறப்படும் CCTV காட்சிகள் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன.
கொலை நடப்பதை பார்த்தும் சென்றதாக குற்றச்சாட்டு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காட்சிகளில், சீருடையில் இருந்த ஆண் காவலர் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி, பெண் காவலருடன் சம்பவ இடம் அருகே வருவது பதிவாகியுள்ளது. அப்போது ஆயுதங்களுடன் இருந்த கும்பல் ராஜுவை தாக்குவதை பார்த்தும், அவர்கள் தலையிடவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த பொண்ணு என்ன தப்பு பண்ணுச்சு.....கண்ணிமைக்கும் நொடியில் உயிரே போச்சே! கதறும் குடும்பம்! பகீர் வீடியோ...!!!
தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் காரில் தப்பிச் சென்ற பிறகும் காயமடைந்த ராஜுவுக்கு முதலுதவி அளிக்கவோ, உடனடியாக மற்ற காவல் பிரிவுகளுக்கு தகவல் தெரிவிக்கவோ இல்லாமல் அந்த இடத்தைவிட்டு அவர்கள் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பழிவாங்கும் பின்னணி இருக்கலாம் என சந்தேகம்
கொல்லப்பட்ட ராஜு மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சுப்ரமண்யபுரா இரட்டைக் கொலை வழக்கிலும் அவர் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பனசங்கரி பகுதியில் நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் 'ஸ்டாண்ட் குட்டி' என்ற ரவுடியின் கூட்டாளிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தனிப்படைகள் தீவிர தேடுதல்
வெளியான வீடியோவின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடமையில் அலட்சியம் காட்டியதாக கூறப்படும் காவலர்களின் செயல்பாடும் தனியாக விசாரிக்கப்படுகிறது. இதையடுத்து, தெற்கு பிரிவு டிசிபி கோனா வம்சி கிருஷ்ணா தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடி ராஜு கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
A man with a criminal background was brutally hacked to death by a group of armed attackers in broad daylight on a busy road in Bengaluru’s JP Nagar on Sunday evening.
The shocking murder, which took place near IG Circle, was caught on CCTV, with the visuals showing the… pic.twitter.com/aehtYGKiv0
— Hate Detector 🔍 (@HateDetectors) June 29, 2026
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!