கள்ளக்காதலி உறவை முறித்துக் கொண்டதால்... அவரது மகனை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த கொடூரம்...!

கள்ளக்காதலி உறவை முறித்துக் கொண்டதால்... அவரது மகனை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த கொடூரம்...!


Because the adulterer broke the relationship... the brutality of killing his son by drowning him in the pond...

கள்ளக்காதலி தன்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பெண்ணின் ஏழு வயது மகனை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

மும்பையில் தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தங்கள் மகனை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்று கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவனின் வீட்டின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் அந்த சிறுவன் உடல் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சிறுவன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.  

பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நிதின் கம்ப்ளே என்பவர் தான் பள்ளியிலிருந்து சிறுவனை தினமும் அழைத்து வருவது வழக்கம். சம்பவத்தன்று அவர் சிறுவனை அழைத்து வந்த போது நீச்சல் குளத்தில் அச்சிறுவனை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணையில் தகவல் தெரிய வந்ததும், அந்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

விசாரணையில் சிறுவனின் தாய்க்கும் காவலாளி நிதின் காம்ப்ளேவுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததுள்ளது.   அவர்களுக்கு ஏற்பட்ட தகராறினால் கள்ள உறவை சிறுவனின் தாய் முறித்துக்கொண்டார். நிதின் அழைத்த போதும் அந்த பெண் வர மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த நிதின் காம்ப்ளே அந்த பெண்ணை பழி வாங்க நினைத்து அவரின் 7 வயது மகனை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.