அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தனியார் பள்ளியின் மோசமான தண்டனை.! கல்வித்துறை நடவடிக்கை என்ன.?!
இருட்டு அறையில் மாணவர்கள்
கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இருட்டு அறையில் பள்ளி மாணவர்களை அடைத்து வைத்த கொடூர சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரில் இருக்கும் ஆர்கிட் இன்டர்நேஷனல் பள்ளி தான் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு மாணவர்களை அவமானப்படுத்தியதால் அவர்களுக்கு மிக மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவர்களின் மனநலம் பாதிப்பு
இது பெற்றோர் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளின் செயல்பாடுகளில் இது மிகப்பெரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளி ஊழியர்களின் நடத்தை படிக்கும் குழந்தைகளை மோசமாக பாதிக்கிறது. இது மாணவர்களின் மனநலம், அறிவு உள்ளிட்டவற்றை சீர்குலைக்க கூடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா.?
மேலும், இந்த தண்டனை குறித்து பெற்றோரிடம் கூறினால் மேலும் அதிக தொந்தரவு கொடுப்போம் என்று மாணவர்களை பள்ளி ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 6 மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் வெளிச்சம் இல்லாத இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
மறுக்கும் பள்ளி
இது பற்றி பெற்றோர் கல்வித்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து அவர்கள் இனி எப்போதும் இந்த பள்ளியை திறக்க கூடாது என்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோல நடந்து கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு அப்போதுதான் புத்தி வரும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆர்கிட் இன்டர்நேஷனல் பள்ளி மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று தெரிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. கோவில் வளாகத்தில் கலங்கவைக்கும் சோகம்.!