ஒரே நைட்டில் உலக பேமஸான சிறுவன் விபத்தில் சிக்கிய சோகம்.. தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதி.!
"ஜானே மேரி" என்ற பாடலை பாடி வைரலான சிறுவன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஸுக்மா மாவட்டத்தை சார்ந்த சிறுவன் சஹ்தேவ். இவர் "பச்பன் கா பியார், மேரா பூல் நை ஜானா ஹே" என்ற பாடலை பாடி ஒரே இரவில் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி ஈர்க்கப்பட்டார்.
இவரது குரலில் வெளியான பாடல் இன்றளவும் பலரால் சமூக வலைத்தளத்தில் ரீலிஸ் செய்ய உபயோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்கையில் விபத்தில் சிக்கியதாக தெரியவருகிறது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் பாடல் பெருமளவில் ட்ரெண்டிங் ஆகி முதல்வர் வரை பாராட்டுப்பெற்றது.
சிறுவனின் விபத்து தொடர்பான தகவலை அறிந்த அம்மாநில முதல்வர் பூபேஷ், சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக ஜக்தல்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.