#சற்றுமுன்: 5 பேர் கும்பலால் சிறுமி பலாத்காரம்.. முக்கிய குற்றவாளி என்கவுண்டர்..! பரபரப்பு சம்பவம்.!Assam Guwahati Minor Girl Gang Rapped case Prime Accuse Shot Dead Encounter Flee Police

சிறுமியை 5 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 4 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான். அவன் தப்பி செல்லும் திட்டத்துடன் செயல்பட்டதால் காவல் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக பிகி அலி, பாய்ஜூல் அலி, ராஜா அலி, பூனா அலி மற்றும் பிங்கு அலி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியாக பிகி அலி கம்ருத் மாவட்டத்தில் உள்ள டாம்பூர் வனப்பகுதியில் தலைமறைவாகி இருக்கிறான். 

இதனை அறிந்த தனிப்படை காவல் துறையினர் பிகி அலியை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நேற்று இரவில் அவனை கைது செய்துள்ளனர். பிகி அலியை காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றபோது, அவன் காவல் துறையினரின் துப்பாக்கியை எடுத்து சுட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளான். 

Assam

இந்த சம்பவத்தில் 2 பெண் காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் சுய பாதுகாப்பு கருதி பிகி அலியை என்கவுண்டர் செய்துள்ளனர். அவனின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிர் போயுள்ளது. 

அவனின் உடல் கவுகாத்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.