குழந்தைகளுக்கு ஆபத்தாகும் புதிய கொரோனா.! இந்த நாட்டுடன் விமான சேவையை உடனே ரத்து செய்யுங்கள்.! கெஜ்ரிவால் வேண்டுகோள்.!

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் புதிய கொரோனா.! இந்த நாட்டுடன் விமான சேவையை உடனே ரத்து செய்யுங்கள்.! கெஜ்ரிவால் வேண்டுகோள்.!


arvind-kejriwal-request-to-stop-the-singapore-flight

கொரோனா இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில், மூன்றாவது அலை உருவாகப் போவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு புதியவகை கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் தோன்றியுள்ளதால், சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

Singapore

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது ட்விட்டர்  பதிவில், ‘சிங்கப்பூரில் தோன்றியுள்ள ஒரு புதிய வகை கொரோனா வைரஸ், குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. அந்த கொரோனா வைரஸ், மூன்றாவது அலை வடிவில் டெல்லியை அடையக்கூடும். இந்நிலையில் மத்திய அரசுக்கு எனது வேண்டுகோள். சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்யுங்கள். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.