BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ரஜினியுடன் தர்காவுக்கு சென்ற ஏ.ஆர்.ரகுமான்: பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..!
கடந்த 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருப்பதி சென்றடைந்தார். ரஜினியை வரவேற்ற திருப்பதி திருமலை தேவஸ்தான துணை செயல் அதிகாரியான ஹரிந்திரநாத், அவருக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதனையடுத்து திருமலை தேவஸ்தானம் சார்பில் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை வி.ஐ.பி தரிசனத்தில் ரஜினிகாந்த் சுவாமியை தரிசனம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதன் பின்னர் ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள பெத்தா தர்காவிற்கு வந்த ரஜினிகாந்த், அங்கு பிரார்த்தனை செய்தார். ரஜினியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர் ரகுமான் உடன் சென்றனர். ஏ.ஆர் ரகுமானின் மகனும் அவர்களுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நால்வரும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.