கிட்னியை விற்பனை செய்தால் ரூ.7 கோடி... 16 வயது சிறுமியிடம் ரூ.16 இலட்சம் பறித்த கேடி.. பதறிப்போன தந்தை..!

கிட்னியை விற்பனை செய்தால் ரூ.7 கோடி... 16 வயது சிறுமியிடம் ரூ.16 இலட்சம் பறித்த கேடி.. பதறிப்போன தந்தை..!


andra-pradesh-minor-girl-loss-rs-16-lakh-inr-kidney-don

 

உங்களின் கிட்னி அவசரமாக தேவைப்படுகிறது என பேசி, ரூ.7 கோடி பணம் கிடைக்கும் என ஆசையாக ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏமார்ந்து போன சிறுமி வீட்டிற்கு பயந்து தலைமறைவாகி பின் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூரை சேர்ந்த தொழிலதிபரின் 16 வயது மகள், ஹைதராபாத் நகரில் நர்சிங் பயின்று வருகிறார். இவர் தனக்கான உடை, வாட்ச் போன்றவற்றை வாங்க தந்தையின் கிரெடிட் கார்டை உபயோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மாணவிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. 

அதில், முக்கியமானவருக்கு கிட்னி தேவைப்படுகிறது என்றும், உங்களின் கிட்னியை தானம் செய்தால் ரூ.7 கோடி பணம் கிடைக்கும். அதற்கு உங்களை தேர்வு செய்துள்ளோம் என தகவல் வந்துள்ளது. மறுமுனையில் பிரகாஷ் என்பவர் தன்னை மருத்துவர் என அறிமுகம் செய்துவிட்டு, 16 வயது சிறுமியின் உடல் பரிசோதனை அறிக்கையை கேட்டு பெற்றுள்ளார். 

பின்னர், கிட்னி தானம் செய்ய முதற்கட்டமாக செயலாக்கத்தை தொடங்க ரூ.16 இலட்சம் பணம் வேண்டும் என்றும், அதனை அனுப்பிய பின்னர் கிட்னி தானம் செய்துவிட்டு ரூ.7 கோடியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Andra Pradesh

இதனை உண்மை என நம்பிய பெண்மணி ரூ.16 இலட்சத்தையும் அனுப்பி வைக்க, சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த டெல்லி முகவரிக்கு சென்று பார்த்தபோது அனைத்தும் போலி என்பது உறுதியானது. இதற்கிடையில், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 இலட்சம் பரிவர்த்தனை நடந்த தகவல் அறிந்த சிறுமியின் தந்தை, மகளிடம் விசாரணை நடத்தி விடுதியில் இருந்து வீட்டிற்கு வர அறிவுறுத்தி இருக்கிறார்.  

தந்தை தன்னை கண்டிக்க அழைக்கிறார் என பதறிப்போன மகளோ, ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளார். மகள் குறித்த தகவல் தெரியாத காரணத்தால், தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி சிறுமியை கண்டறிந்து விசாரித்ததில் உண்மை அம்பலமானது. சிறுமியிடம் மோசடியில் ஈடுபட்ட நபருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.