சோறுபோட்ட கணவனுக்கு விஷ ஊசி., கள்ளக்காதலனுடன் சிறைப்பறவையாக மனைவி.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

சோறுபோட்ட கணவனுக்கு விஷ ஊசி., கள்ளக்காதலனுடன் சிறைப்பறவையாக மனைவி.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!


andra-pradesh-affair-girl-killed-her-husband

கள்ளக்காதல் வயப்பட்ட மனைவி கணவனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து விஷ ஊசி போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. திட்டமிட்டு கணவரை வரவழைத்து கள்ளக்காதலன் கையால் கணவனை கொலை செய்த பெண்ணின் பகீர் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கம்பம், சித்தகானி பகுதியில் வசித்து வருபவர் ஷேக் ஜமால் சாயபு. மனைவி ஷேக் இமாம் (வயது 46). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இமாமுக்கும் - அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் ராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனால் அவ்வப்போது கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக வந்துள்ளது. இவர்களின் உல்லாச வாழ்க்கை ஷேக் ஜமாலுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் கணவன் - மனைவி பிரச்சனை நடந்து வந்துள்ளது. இவ்வாறாக அவ்வப்போது தகராறு நடந்து வந்த நிலையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

Andra Pradesh

கள்ளக்காதல் ஜோடியின் திட்டப்படி மருத்துவமனையில் ரூ.3,500 கொடுத்து விஷ ஊசி வாங்கி தயார்படுத்தி வைத்துள்ளனர். பின்னர், மகளின் வீட்டிற்கு சென்ற மனைவி கணவரை தொடர்பு கொண்டு தன்னை நேரில் வந்து அழைத்து செல்ல கோரிக்கை வைத்துள்ளார். மனைவியை அழைக்க சென்ற ஷேக் ஜமால், மோகன் ராவ் மற்றும் அவனின் நண்பர்களால் வழிமறிக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவத்தில் ஷேக் ஜமால் சாயபு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி ஷேக் இமாம், கள்ளக்காதலன் மோகன் ராவ், அவனின் நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஷ்வந்த், சாம்பசிவ ராவ் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.