3 வயது சிறுமி மாயத்தில் 12 நாட்கள் நீடிக்கும் மர்மம்! 40 ஏக்கர் அடர்ந்த காட்டில் மர்மமாய் தொங்கும் பொம்மைகள்..! தடையமே இல்லாமல் மறைந்த 3 வயது சிறுமி.. பகீர் கிளப்பும் பின்னணி..!!!



andhra-pradesh-missing-girl-jahnavi-search-operation

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் 12 நாட்களாகக் காணாமல் போன 3 வயது சிறுமி ஜாஹ்னவியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள போதிலும், சிறுமியின் இருப்பிடம் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்காததால் மர்மம் நீடிக்கிறது.

துனி மண்டலப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த பாமாயில் தோட்டத்தில்தான் ஜாஹ்னவி மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் படையினருடன் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்கே தேடியும் கிடைக்காத தலை.... ஆணுறுப்பு இருந்தால் தானே இப்படி செய்வ! சூட்கேஸில் இருந்த சடலம்..... ஆக்ரோஷமாக மனைவி செய்த பயங்கரம்! பதறவைக்கும் பின்னணி..!!!

வேலியில் தொங்கிய பொம்மைகள் ஏற்படுத்திய பரபரப்பு

தேடுதல் நடைபெற்று வரும் தோட்டத்தின் வேலிப் பகுதியில் இரண்டு பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த சிலர் மாந்தீரிகம் தொடர்பான நடவடிக்கையாக சந்தேகித்தனர்.

ஆனால், போலீசார் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். தகவலின்படி, தோட்டப் பகுதியில் ஏதேனும் பெரிய பாம்புகள் அல்லது காட்டு விலங்குகள் இருந்தால் அவற்றின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக, பொம்மைகளுக்குள் கோழி இறைச்சி வைத்து ‘க்ரைம் சீன் ரீக்ரியேஷன்’ முறையில் அதிகாரிகளே அவற்றை கட்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன கருவிகளுடன் தொடரும் தேடுதல்

ஜாஹ்னவியை கண்டுபிடிக்கும் முயற்சியாக, தெர்மல் ட்ரோன்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனங்கள் மற்றும் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பகல், இரவு பாராமல் பல குழுக்கள் தோட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றன.

சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா அல்லது ஏதேனும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாமா என்ற இரு முக்கிய கோணங்களில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மோப்ப நாய் உயிரிழந்ததால் புதிய கேள்விகள்

தேடுதல் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி வந்த மோப்ப நாய் ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவமும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு ஜாஹ்னவி மாயம் வழக்கைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். சிறுமியை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணை அதிகாரிகள் ஒவ்வொரு தடயத்தையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 3 வயது சிறுமி 6 நாட்களாக மாயம்! கூண்டுக்குள் இருக்கும் நாயைப் பார்த்து கதறும் தாய்.... பகீர் பின்னணி..!!!