பள்ளி விடுதியில் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்...! 10 பேருக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி... பெற்றோர்கள் ஆவேசம்..!!!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள குருகுலப் பள்ளி விடுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேரின் தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள பள்ளியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் மர்ம நபர்கள் எப்படி நுழைந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நள்ளிரவில் மாணவிகளின் தலைமுடி வெட்டப்பட்டது
பல்நாடு மாவட்டம், சத்தெனப்பள்ளி ஊரக மண்டலத்திற்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரத்தில் குருகுலப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவில் மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் 10 பேரின் தலைமுடியை வெட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: விடுதி அறையில் தூங்கி கொண்டிருந்த மாணவன்! திடீரென இடிந்து விழுந்த அலமாரி.... ஷாக் வீடியோ!!!
பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கடும் வாக்குவாதம்
காலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். விடுதியில் மாணவிகள் தங்கியிருந்தபோதே இத்தகைய சம்பவம் நடந்துள்ளதால், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் விடுதிக்குள் நுழைந்தது எப்படி என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை நடத்த பெற்றோர் வலியுறுத்தல்
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பள்ளி நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டதாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமுடியை வெட்டியவர்கள் யார், அவர்கள் எப்படிப் பள்ளி விடுதிக்குள் வந்தார்கள் என்பதைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
పల్నాడు జిల్లా సత్తెనపల్లి రూరల్ మండలం రామకృష్ణాపురం గురుకుల పాఠశాలలో వింత ఘటన..
అర్ధరాత్రి నిద్రిస్తున్న బాలికల జడలు కత్తిరించిన గుర్తుతెలియని దుండగులు..
8వ తరగతి చదువుతున్న 10 మంది విద్యార్థినుల జడలు కత్తిరింపు..
గురుకుల పాఠశాలలో భద్రతా లోపాలపై పాఠశాల సిబ్బందిపై తల్లిదండ్రుల… pic.twitter.com/detQEKXobF— RTV (@RTVnewsnetwork) November 10, 2026