விடுதி அறையில் தூங்கி கொண்டிருந்த மாணவன்! திடீரென இடிந்து விழுந்த அலமாரி.... ஷாக் வீடியோ!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாணவர் மீது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மர அலமாரி திடீரென சரிந்து விழுந்தது. மாணவர் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அலமாரியின் அடியில் சிக்கிய மாணவர் காயமின்றி உயிர் தப்பினார்.
திருட்டைத் தடுக்க அறையில் சிசிடிவி கேமரா
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள கோட்டா நகரில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவரின் அறையில் அடிக்கடி பொருட்கள் திருட்டுப் போயுள்ளன. இதைக் கண்காணிப்பதற்காக அவர் தனது அறையில் சொந்தமாக சிசிடிவி கேமரா ஒன்றைப் பொருத்தியுள்ளார்.
கட்டில் மீது சரிந்து விழுந்த அலமாரி
இந்நிலையில், மாணவர் அறையில் உள்ள கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மர அலமாரி திடீரெனப் பெயர்ந்து கட்டில் மீது விழுந்தது. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் அறை முழுவதும் சிதறின.
எதிர்பாராத விதமாகக் கணநேரத்தில் நடந்த இந்த விபத்தில், மாணவர் அலமாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இருப்பினும், அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சில வினாடிகளுக்குப் பிறகு எழுந்த அவர், நடந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
விடுதி பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விடுதி அறைகளில் பொருத்தப்படும் அலமாரிகள் உள்ளிட்ட தளபாடங்களின் தரம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து இந்த வீடியோ கேள்விகளை எழுப்பியுள்ளது.
Another day in Kota, and this hostel CCTV footage is genuinely alarming!
— Bhavesh Gujrati (@Bhaveshlivelife) November 9, 2026
According to the student who shared the video, he installed a personal security camera after repeated thefts in his hostel.
But instead of catching a thief, the camera captured something completely… pic.twitter.com/bcxyOErPDs