இந்தியா

விறகு எடுக்க காட்டுக்குள் சென்ற இளம்பெண்.! பைக்கில் வந்த 3 பேர்!! காட்டில் நடந்த அட்டூழியம்..!

Summary:

Andhra girl abused in forest while collecting sticks

ஆந்திரா மாநிலம் சித்திதூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) 20 வயதான இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையியல் தனது கணவர் வீட்டில் இருந்த மீனா சமைப்பதற்கு விறகு தேடி அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

காட்டுக்குள் மீனா தனியாக இருப்பதை பார்த்த சில விஷமிகள் அவரை கற்பழிக்க திட்டம் போட்டுள்ளனர். இதனை அடுத்து மீனாவின் பாட்டி இறந்துவிட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் பொய் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

ரமேஷின் பைக்கை மற்றொரு பைக்கில் விஜய், சிவா என்ற வாலிபர்கள் பின்தொடர்ந்துள்ளனர். காட்டுக்குள் மறைவான இடத்திற்கு சென்ற அவர்கள் மீனாவை கீழே இறக்கி அவரது வாயில் துணியை வைத்து மூட்டி மூன்று பேரும் மாறி மாறி கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அங்கிருந்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த மீனா நடந்த சம்பவம் குறித்து வீட்டில் கூறியுள்ளார். இதுகுறித்து மீனாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து ரமேஷ், விஜய், சிவா மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement