விஷவாயு தாக்குதலால் நின்று கொண்டிருக்கும்போதே மயங்கி கீழே விழும் இளம் பெண்..! வைரல் வீடியோ.!

விஷவாயு தாக்குதலால் நின்று கொண்டிருக்கும்போதே மயங்கி கீழே விழும் இளம் பெண்..! வைரல் வீடியோ.!


Andhra gas leak people falling down video goes viral

ஆந்திராவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் இளம் பெண் ஒருவர் நின்றுகொண்டிருக்கும்போதே மயங்கி விழும் வீடியோ காட்சி ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர் ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே இயங்கிவரும் எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரெனெ விஷவாயு காசிவு ஏற்பட்டு திடீரென புகை வெளியேறியது. விஷவாயு கலந்த புகையை சுவாசித்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

Andhra gas leak

இந்த எதிர்பாராத விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிர் இழந்துள்ள நிலையில், 1000 கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில் மக்கள் சாலைகளில் மயங்கிக்கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நடுங்க வைக்கின்றனர்.

இதனிடையே சாலை ஓரத்தில் நின்றுகொண்டிற்கும் இளம் பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழும் காட்சி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ.