பகல் நேரத்தில் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த அராஜகம்.. தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு...!!

பகல் நேரத்தில் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த அராஜகம்.. தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு...!!


Anarchy who urinated in front of the house during the day time.. Shots were fired at the family who knocked..

மத்திய பிரதேசத்தில் உள்ள கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்பவர், அந்த பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவரது வீட்டின் முன்பு பகல் நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், பிந்து ஷர்மாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனால், ஆத்திரம் அடைந்த பிந்து ஷர்மா, மதுபோதையில், தனது நண்பர் ஒருவருடன் விகாஷ் சிங் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வீட்டில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

இந்த துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், குற்றவளியான பிந்து ஷர்மாவையும், அவரது கூட்டாளியையும் கைதுசெய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.