வீட்டின் மாடியில் தேசிய கொடி ஏற்ற முயன்ற முதியவர்: தடுமாறி விழுந்ததில் பரிதாப பலி..!

வீட்டின் மாடியில் தேசிய கொடி ஏற்ற முயன்ற முதியவர்: தடுமாறி விழுந்ததில் பரிதாப பலி..!


An old man who tried to hoist the national flag on the floor of his house stumbled and fell

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம்  ஜவ்ஹரில் உள்ள ராஜேவாடி பகுதியை சேர்ந்தவர் லக்சுமன் ஷிண்டே (65). இவர் நேற்று தனது வீட்டு மாடியில் கொடி ஏற்ற முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

நாட்டின் 75 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பரவலாக தங்கள் வீட்டில் கொடியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு லக்சுமன் ஷிண்டே தன்னுடைய வீட்டு மாடியில் தேசியக்கொடி ஏற்ற முயன்றார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தோர்  ஜவ்ஹரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாசிக்கில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.