அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
குடும்ப தகராறில் தந்தையுடன் சேர்ந்து... மகனும் பலியான பரிதாபம்..!
தண்டவாளத்தின் நடுவில் தந்தை நிற்பதை பார்த்த மகன் காப்பாற்ற ஓடிய போது, வேகமாக வந்த ரயில் மோதியதில் இருவரும் பலியான சோகம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
மத்திய பிரதேசம், பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரி சிங் நர்வாரியா(55). நேற்று குடும்பத்தில் நடந்த தகராறு காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் பாதையில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தனது தந்தை நடுவில் நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காப்பாற்ற ரயில் வரும் பாதையில் ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியது.
ரயில் மோதியதில் தந்தையும் மகனும் உடல் துண்டாகி உயிரிழந்தனர், என ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.