இந்தியா சினிமா

பலகோடி சொத்து இருந்தும் தினமும் பசுவின் சிறுநீர் குடித்துவரும் பிரபல நடிகர்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

Akshay Kumar reveals he drinks cow urine everyday

தான் தினமும் பசுவின் சிறுநீரை குடித்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தற்போது பெல்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அக்ஷய் குமார். இதனிடையே டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் "இன் டு தி வைல்ட்" என்னும் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியானது விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சிகனா ஒரு முன்னோட்டமாக பியர் கிரில்ஸ் உடன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் நடைபெற்ற ஒரு நேரலை உரையாடலில் நடிகர் அக்ஷய்குமார் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியின்போது யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்திய சம்பவம் குறித்து நடிகை ஹூமா குரேஷி அக்ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அக்ஷய்குமார் யானையின் மலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தேநீரை அருந்தியதால் எனக்கு பெரிய அளவில் சிரமங்கள் இல்லை எனவும், ஏனெனில் தினமும் தான் பசுவின் சிறுநீரை ஆயுர்வேத காரணங்களுக்காக அருந்தி வருவதாகவும் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.


Advertisement