அரசியல் இந்தியா

உ.பி: எங்கள் அணி ஆட்சிக்கு வந்தால் 2 ஓ.பி.சி., தலித் முதல்வர்கள், 3 முஸ்லீம் துணை முதல்வர்கள் - ஓவைஸி அறிவிப்பு.!

Summary:

உ.பி: எங்கள் அணி ஆட்சிக்கு வந்தால் 2 ஓ.பி.சி., தலித் முதல்வர்கள், 3 முஸ்லீம் துணை முதல்வர்கள் - ஓவைஸி அறிவிப்பு.!

உத்திர பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. உதிர்ப்பிரதேசத்தை பொறுத்த வரையில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் நிலையில், மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வர முயற்சித்து வருகிறது. 

அதனைப்போல, பகுஜன் சமாஜ்வாடி, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்களின் கூட்டணி பேச்சுவார்த்தை, தீவிர களப்பணி என புதிய உத்வேகத்தில் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, உத்திர பிரதேச தேர்தலில் பாபு சிங் குஷ்வாஹாவின் ஜன் அதிகார பார்ட்டி மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அசாதுதீன் ஓவைஸி, "ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பாபு சிங் குஷ்வாஹா மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா கட்சிகளுடன் இணைந்து உத்திரபிரதேச தேர்தலை எதிர்கொள்கிறது. நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 2 முதல்வர்கள் பொறுப்பு உருவாக்கப்படும். ஓ.பி.சி சமூகத்தை சேர்ந்தவரும், தலித் சமூகத்தை சேர்ந்தவரும் முதல்வராக இருப்பார்கள். 

அதனைப்போல, 3 துணை முதல்வர்கள் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு, 3 துணை முதல்வர்கள் பொறுப்பிலும் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் துணை முதல்வராக நியமனம் செய்து பணியாற்றுவார்கள்" என்று தெரிவித்தார்.


Advertisement