ஒரு நடிகை பிரதமரை இவ்வாறு கூறலாமா?. வைரலாகும் ட்வீட்!.

ஒரு நடிகை பிரதமரை இவ்வாறு கூறலாமா?. வைரலாகும் ட்வீட்!.


actress talk about narenthiramodi

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா பிரதமர் நரேந்திர மோடியை மோசமாக கிண்டல் செய்து ட்வீட் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதற்கு ‘ஒற்றுமையின் சிலை’ என்று பெயர் வைக்கப்பட்டது.

சிலையின் பாதத்திற்கு கீழ் மோடி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை, நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

அவர் மோடியின் புகைப்படத்தை வெளியிட்டு அந்த பதிவில் கூறப்பட்ட வார்த்தைகள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அதாவது, மிக பிரம்மாண்டமான சிலையின் கீழ் சிறிய உருவமாக மோடி நிற்பதால், அது என்ன பறவை எச்சமா?’ என திவ்யா கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் அதிக அளவில் வைரலானது.

ஒரு நாட்டின் பிரதமருக்கு இது மிகப்பெரிய அவமானம் என சிலர் திவ்யா ஸ்பந்தனாவை தாக்கி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திவ்யா ஸ்பந்தனாவை கடுமையாக விமர்சித்துள்ளது.