நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
பிரபல கன்னட நடிகர் மரணம்! நண்பரை பிரிந்த சோகத்தில் ரஜினி
பிரபல கன்னட நடிகர் மரணம்! நண்பரை பிரிந்த சோகத்தில் ரஜினி

சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரூ விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ்(வயது 66) சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்த அம்பரீஷ் திரைத்துறையில் மட்டுமல்லாது அரசியலிலும் வெற்றிவாகை சூடியவர். இதுவரை 208 திரைப்படங்களில் நடித்துள்ள அம்பரீஷ் கடந்த 1998-99, 99-2004 மற்றும் 2004-2009 ஆண்டுகளில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2006-2008 ம் காலகட்டத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரூ விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் தமிழில் ப்ரியா படத்தில் ரஜினியிடன் நடித்துள்ளார். இவரது இழப்பை தாங்க முடியாத ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் "அம்பரீஷ் ஒரு மிகச்சிறந்த மனிதர்.. என் உயிர் நண்பர்.. நான் இன்று உன்னை இழந்துவிட்டேன். உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
A wonderful human being ... my best friend ... I have lost you today and will miss you ... Rest In Peace #Ambrish
— Rajinikanth (@rajinikanth) November 24, 2018