அசாம் முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை; குழந்தை திருமணத்தில் ஒரே நாளில் 1800 ஆண்கள் கைது...!

அசாம் முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை; குழந்தை திருமணத்தில் ஒரே நாளில் 1800 ஆண்கள் கைது...!



Action taken by the Chief Minister of Assam; 1800 men arrested in one day for child marriage...

அசாம் மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால் குழந்தை திருமணம் செய்து கொண்ட 1800 ஆண்கள் ஒரே நாளில் கைது.

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பால், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட உள்ளனர். 

14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தவர்களை குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்தவர்களை தேடி வரும் நிலையில் நேற்று மட்டும் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் இதுவரை 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்தவர்களை கைது செய்து, போக்சோ சட்டம் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள் என முதல்வர் ஹிமந்த பிஷ்வா அறிவித்துள்ளார்.