பாகிஸ்தான் டீ கடையில் அபிநந்தன் போஸ்டர்! அதில் என்ன எழுதியுள்ளது தெரியுமா?

பாகிஸ்தான் டீ கடையில் அபிநந்தன் போஸ்டர்! அதில் என்ன எழுதியுள்ளது தெரியுமா?


abinandan-poster-in-pakistan-teastall

கடந்த பிப்ரவரி 14ல்  புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து இந்த   தாக்குதலுக்கு பதிலடியாக பால்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் விமானப்படையை துரத்தி அடித்தபோது  நேர்ந்த விபத்தால் எதிர்பாராதவிதமாக இந்திய ராணுவவிமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் பலநாடுகளில் நெருக்கடியால் விடுதலை செய்யப்பட்டார்.

abinandan

இந்நிலையில் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையில்,  பாகிஸ்தான் வீரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அபிநந்தன்  டீ அருந்திக் கொண்டே பதிலளித்திருப்பார். பாகிஸ்தான் வெளியிட்ட அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவியது.

இந்நிலையில்,பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள  டீ கடை ஒன்றில் அபிநந்தனின் புகைப்படம் கொண்ட போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அந்த போஸ்டரில், “இந்தக் கடையில் விற்கப்படும் டீ எதிரியை கூட நண்பனாக்கும் என்ற வாசகமும்  உருதுவில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.