தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
பிரதமர் மோடியை நோக்கி மாலையுடன் பாய்ந்த இளைஞர்; மாலையை வாங்கிக் கொண்ட பிரதமர்.... வைரலாகும் வீடியோ...!

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திறந்த காரில் வந்த போது அவரை நோக்கி மாலையுடன் பாய்ந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
2023-ஆம் வருடத்திற்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்று உள்ளார். திறந்த காரில் சாலை வழியே பேரணியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி பேரணியின் நடுவில் இளைஞர் ஒருவர் திடீரென மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி பாய்ந்து சென்றுள்ளார்.
அந்த இளைஞரை பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இருந்த போதிலும் மாலையை பிரதமர் மோடி வாங்கி கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த இளைஞரை உடனடியாக அப்புறப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.