இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

மந்திரவாதி கூறிய ஒற்றை வார்த்தை!! நம்பிய பெண்ணிற்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. 73 லட்சம் அபேஸ்!!

Summary:

உடலில் இருக்கும் பேய்யை ஓட்டுவதாக கூறி பெண் ஒருவரிடம் 73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப

உடலில் இருக்கும் பேய்யை ஓட்டுவதாக கூறி பெண் ஒருவரிடம் 73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம் என உலகம் ஒருபுறம் வளர்ந்துகொண்டே சென்றாலும், மாந்த்ரீகம், மந்திரவாதி, பேய் போன்றவற்றின் மீதான நம்பிகையும் சில இடங்களில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

அப்படிபட்ட வழக்குகளில் ஒன்றுதான் இது. 36 வயது மதிக்கத்தக்க குவைத்தை சேர்ந்த பெண், சில காலங்களாக கடும் கஷ்டத்தில் இருந்துவந்துள்ளார். பல முயற்சிகள் செய்தும் எந்த பலனும் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு தெரிந்த சிலரிடம் அறிவுரை கேட்க, அவர்கள் ஒரு மந்திரவாதியை கைகாட்டி அவரை சென்று பார்க்கும்படி கூறியுள்ளனர்.

உடனே அந்த பெண்ணும் அந்த மந்திரவாதியை சென்று பார்த்துள்ளார். அங்கு சென்ற இடத்தில், "உனது உடலில் பேய் இருக்கிறது" என மந்திரவாதி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தநிலையில், அதற்கு தான் என்ன செய்யவேண்டும் என கேட்டுள்ளார்.

தான் அந்த பேய்யை ஓட்டுவதாகவும், அதற்கு பூஜை பரிகாரங்கள் செய்ய சுமார் 30,000 தினார் (ரூபாய். 70 லட்சம்) வரை செலவாகும் எனவும் மந்திரவாதி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க, முதல் தவணையாக 25,080 தினார்களை வழங்கியுள்ளார். பின்னர்  4000 தினார்களை வழங்கியுள்ளார்.

இறுதியில் அந்த மந்திரவாதி பணத்தை வாங்கிக்கொடு சில பல மாந்த்ரீக வேலைகளை செய்துகாட்டி அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார். இறுதியில் அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த மந்திரவாதியை பார்க்கும்படி கூறிய இரண்டு பெண்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.

உடலில் இருக்கும் பேய்யை ஓட்டுவதாக கூறி, 36 வயது பெண்ணிடம் நபர் ஒருவர் 73 லட்சம் ஏமாற்றி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement