அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம்.. மரத்தின் மீது மோதி விபத்து.. தடகள வீரர் பலி.!

அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம்.. மரத்தின் மீது மோதி விபத்து.. தடகள வீரர் பலி.!


A two-wheeler going at high speed.. An accident hit a tree.. An athlete was killed.!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தொலிகோடு கிராமத்தில் வசித்து வருபவர் ஓம்கர் நாத். தடகள வீரரான இவர் தேசிய அளவில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓம்கர் நாத்  திருவனந்தபுரம் சிறப்பு ராணுவ படையில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கொல்லம் - திருமங்கலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். 

accident

இந்நிலையில் அவர்கள் புனலூர் வாலகோடு தேவாலயம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓம்கர் நாத்தின் இருசக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதனால் ஓம்கர் நாத் மற்றும் அவரது நண்பர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருவனந்தபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஓம்கர் நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தடகள வீரர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.