நீதிமன்றத்தில் பரபரப்பு... மாஜிஸ்திரேட் மீது செருப்பு வீசிய கைதி... அதிர்ச்சி சம்பவம்..!

நீதிமன்றத்தில் பரபரப்பு... மாஜிஸ்திரேட் மீது செருப்பு வீசிய கைதி... அதிர்ச்சி சம்பவம்..!


a-shocking-incident-where-a-prisoner-threw-a-shoe-at-th

நீதிமன்றத்தில் கைதி மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் சேக் என்ற பிரதீப் தாயடே  (39). இவர் மீது அங்குள்ள என்.எம். ஜோஷி, டிராம்பே காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த சனிக்கிழமை இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜாவித் சேக், குர்லா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு வந்தார். சுமார் 1 மணி நேரம் காத்திருந்தார். ஆனால், வழக்கு விசாரணை தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் திடீரென காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி மாஜிஸ்திரேட்டு மீது வீசி எறிந்தார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக ஜாவித் சேக்கை கைது செய்தனர். 

நீண்ட காலமாக தன் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த ஆத்திரத்தில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசியதாக ஜாவித் சேக் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்