தலைநகரில் பரபரப்பு..ரூ 350 பணம் கேட்டு தர மறுத்த இளைஞரை கொடூரமாக குத்தி கொலை செய்த சைக்கோ சிறுவன்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.!

தலைநகரில் பரபரப்பு..ரூ 350 பணம் கேட்டு தர மறுத்த இளைஞரை கொடூரமாக குத்தி கொலை செய்த சைக்கோ சிறுவன்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.!


a-sensation-in-the-capital-a-psycho-boy-brutally-stabbe

தலைநகர் டெல்லியில் ஜந்து மஸ்தூர் காலனி பகுதியில் நேற்று இரவு அவ்வழியாக நடந்து சென்ற இளைஞர் ஒருவரை வழிமறித்து சிறுவன் ஒருவன் தனக்கு பணம் தருமாறு கேட்டு மிரட்டி இருக்கிறான். ஆனால் அந்த இளைஞர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த இளைஞரை கொடூரத்தனமாக குத்தி கொலை செய்துள்ளான்.

மேலும் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததும் அவரிடமிருந்த 350 ரூபாய் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் துடிதுடித்துக் கொண்டிருப்பதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

delhi

ஆனால் அந்த இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.