பகீர்... அடேயப்பா 17,500 ரூபாய்க்கு ஃபேஷியல் செய்த பெண்... தகதகவென எரிந்த முகம்... சலூனுக்கு எதிராக FIR பதிவு.

பகீர்... அடேயப்பா 17,500 ரூபாய்க்கு ஃபேஷியல் செய்த பெண்... தகதகவென எரிந்த முகம்... சலூனுக்கு எதிராக FIR பதிவு.



a-mumbai-womanwho-got-facial-for-17500-rupees-got-face

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையைச் சார்ந்த பெண் ஃபேசியலுக்காக சலூன் ஒன்றுக்கு சென்ற போது அவரது முகம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த அழகு நிலையத்தின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள  லோகண்ட் வாலா என்ற இடத்தைச் சேர்ந்த  பெண்மணி ஒருவர் தனது முகத்தை அழகு படுத்துவதற்காக குலோ லக்ஸ் சலூன் என்ற அழகு நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அந்த அழகு நிலையத்தில் 17 ,500 ரூபாய்க்கு  ஃபேசியல் செய்திருக்கிறார். ஃபேசியல் முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் சிறிது நேரத்தில் அவரது முகம் தீயினால் வெந்தது போல் கருமையாகி  சரும பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.

maharastra



இது தொடர்பாக தோல் மருத்துவரை சந்தித்தபோது தரமற்ற பொருட்களை பயன்படுத்தி ஃபேசியல் செய்ததால்  மிக தீவிரமான சரும பாதிப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். இதனைக் கேட்டு  அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி  மாநகராட்சி கவுன்சிலர் பிரசாந்த் ரானே என்பவரின் உதவியுடன் அந்த அழகு நிலையத்திற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிரசாந்த் ரானே அழகு நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற மற்றும் மட்டமான பொருட்களால் அந்தேரியைச் சார்ந்த பெண்ணின் முகம் தீவிரமான  பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அந்த அழகு சாதன நிலையத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.