ஹனுமன் ஜெயந்தியை சாமியார்களுடன் சேர்ந்து கொண்டாடிய குரங்கு.. கலக்கல் வீடியோ வைரல்..!

ஹனுமன் ஜெயந்தியை சாமியார்களுடன் சேர்ந்து கொண்டாடிய குரங்கு.. கலக்கல் வீடியோ வைரல்..!


a Monkey Celebrate to Swing Instrument Hanuman Jayandhi Video Goes Viral

சாமியார்களுடன் இசைக்கருவியை இசைத்தபடி ஹனுமன் ஜெயந்தியை குரங்கு சிறப்பித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்று ஹனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்கள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளன.

இந்த நிலையில், கோவில் வளாகத்தில் இருக்கும் சாலையோரத்தில் துறவிகள் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாடல் பாடிக்கொண்டு இருந்த நிலையில், குரங்கு ஒன்றும் அவர்களுடன் சேர்ந்து இசைக்கருவியை இசைத்தபடி இருந்தது. 

இதனை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, அது வைரலாகி வருகிறது. மேலும், அனுமன் பக்திக்கு இதைவிட சிறந்த காட்சி கிடைக்கப்போவதில்லை என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.