"போதை பார்ட்டி, உல்லாசத்திற்கு தடை.." 3 வயது குழந்தை படுகொலை.!! லிவ்விங் டுகெதர் ஜோடி வெறி செயல்.!!
ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது குழந்தை ஏரியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த குழந்தையின் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா சிங். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா சிங்கிற்கு, அகிலேஷ் குப்தா என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மேலும் அகிலேஷ் குப்தா மற்றும் பிரியா சிங் ஆகியோர் லிவ்-இன் உறவுமுறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இரவில் பார்ட்டிகளுக்கு செல்வது மற்றும் போதை பழக்கம் என அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இதற்குப் பிரியா சிங்கின் 3 வயது பெண் குழந்தை தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அந்தக் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஏரியில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் தாய், பிரியா சிங் மற்றும் அவரது கள்ளக்காதலன் அகிலேஷ் குப்தா ஆகியோர் குழந்தையை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!