கால்மேல்கால்போட்டு நடுரோட்டில் பேருந்தை மறித்து அட்ராசிட்டி.. பிரபல யூடியூபரின் சர்ச்சை வீடியோ வைரல்..! 

கால்மேல்கால்போட்டு நடுரோட்டில் பேருந்தை மறித்து அட்ராசிட்டி.. பிரபல யூடியூபரின் சர்ச்சை வீடியோ வைரல்..! 


a Karnataka Based YouTuber

யூடியூப் பக்கத்தில் தன்னை பின்தொடர வைக்க யூடியூபர் சாலையில் படுத்துக்கொண்டு செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் ஆனந்த் கப்பர் பவர். இவர் யூடியூப் தளத்தில் 24 ஆயிரம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். அவ்வப்போது தனது யூடியூப் மற்றும் முகநூல் பக்கத்தில் விடியோக்கள் பதிவு செய்வது வழக்கம். 

இவர் ட்ரெண்ட் ஆக நினைத்த யூடியூப் பக்கம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்காத நிலையில், தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில், "சாலைக்கு நடுவே குடிகாரனை போல படுத்துக்கிடக்கிறார். 

India

அவ்வழியே வந்த கர்நாடக மாநில அரசு பேருந்து ஹாரன் சத்தத்தை எழுப்பியவாறு நிற்க, பேருந்தை கண்டுகொள்ளாதது போல கால்மேல் கால்போட்டு படுத்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, பேசும் அவர் தனது யூடியூப் பக்கத்தை பின்தொடர்ந்து விடியோவை பார்க்குமாறு கோரிக்கை வைக்கிறார்".

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இதனைக்கண்ட பலரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். யூடியூபில் பின்தொடர சொல்ல பல்வேறு விதமான வழிகள் உள்ள நிலையில், இளைஞர் அரசு பேருந்தை மறித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவருக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. 

விடீயோவை காண இங்கு அழுத்தவும்: https://www.facebook.com/reel/377581254501388