நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம்.. 3 குழந்தைகளை கொலை செய்த கொடூர தந்தை.. போலீஸ் விசாரணை..!



a-heart-wrenching-incident-the-brutal-father-who-killed

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் கணவன்- மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் புலம்பெயர் தொழிலாளிகளாக பீகாரில் இருந்து உத்திர பிரதேசம் வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மூன்று குழந்தைகளை காணவில்லை என்று குழந்தைகளின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்துவதாக கூறியிருந்தனர். இதற்கிடையில் குடும்பத்துடன் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கு தயாராகி உள்ளனர் குழந்தைகளின் பெற்றோர்.

Murder

இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாயமானதாக கூறப்பட்ட மூன்று குழந்தைகளும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்தைகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. விசாரணையில் தந்தையே தான் பெற்றெடுத்த 3 குழந்தைகளையும் கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.