கள்ளக்காதல் மோகத்தில் வீட்டை விட்டு ஓடிய பெண்!.. கணவனுடன் சேர்ந்து அடித்து உதைத்த கிராமத்தினர்..!!A girl who ran away from home in a passion for cheating

மத்தியபிரதேச மாநிலம் ராட்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், தனது கணவரின் வீட்டை விட்டு, கள்ளக்காதலனுடன் சென்று வசித்து வந்தார். கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அழைத்தனர் அப்போது அவர் வர மறுத்து விட்டார். 

இந்நிலையில் அந்த பெண்ணின் கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அந்த வீட்டை காலி செய்து சென்று விட்டனர். அதன்பின்னர், அந்த பெண் மறுபடியும் அந்த வீட்டுக்கு வந்து வசிக்கத் தொடங்கினார். கிராம மக்கள், இதை பார்த்து ஆத்திரமடைந்து பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். 

அங்கு வந்த அவரது கணவரும், வேறு சில ஆண்களும் சேர்ந்து, அந்த பெண்ணை கைகளை கட்டி, நடுரோட்டில் வைத்து தடியால் அடித்து உதைத்தனர். பிறகு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு. மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணின் கணவர் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.