ஆறு பேர் கொண்ட சிறுவர் கும்பல் கல்லூரி மாணவரை; கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்...!!



A gang of six boys is a college student; The brutality of stabbing...!!

மத்திய பிரதேசத்தில், பொறியியல் கல்லூரி மாணவரை நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் 6 சிறுவர்கள் குத்தி கொலை செய்துள்ளனர்.  

மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரி பகுதியில் வசிப்பவர் ஆயுஷ் குப்தா (21). பொறியியல் கல்லூரி மாணவரான ஆயுஷ் குப்தா தனது நண்பர்களுடன் டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார். அவர் சென்ற வழியில் சிலர் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். இதனால், அந்த வாகன உரிமையாளர்களான சிறுவர்களிடம் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். 

வாக்குவாதம் முற்றி தகராறானது. இதனை தொடர்ந்து, மாணவரை அந்த சிறுவர்கள் தாக்க ஆரம்பித்தனர். இதனால், ஆயுஷ் குப்தா தனது நண்பர்களுடன் பைக்கில் தப்பி சென்றுள்ளார். ஆத்திரத்தில் அவரை விரட்டி சென்ற சிறுவர்கள் கத்தியால் அவரது கழுத்தில் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் குப்தா சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

இதுபற்றி பவார் குவான் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.