பெண்போல உடையணிந்து சென்ற மாணவர்.. இன்ஸ்டா போஸ்டில் நியாயம் கேட்பு.!

பெண்போல உடையணிந்து சென்ற மாணவர்.. இன்ஸ்டா போஸ்டில் நியாயம் கேட்பு.!



a College Student Instagram Post Viral

கல்லூரிக்கு சென்ற மாணவர் பெண்போல உடையணிந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாகரிகம் முன்னேறி வரும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மக்கள், அனுதினமும் பல்வேறு வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர். ஆண்பால் - பெண்பால் சமத்துவ விவகாரத்தில் பல கருத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்கித் மிஸ்ரா என்ற மாணவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் சம்பவத்தன்று கல்லூரிக்கு பெண் போல ஆடை அணிந்து சென்றேன். என்னை கவனித்த காவலர்கள் 5 பேர் சூழ்ந்துகொண்டார்கள். 

மேலும், நான் எதற்காக அவ்வாறு ஆடை அணிந்து வந்தேன் என்று கேட்டு, எனக்கு மேற்படி கல்லூரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நண்பரிடம் சட்டை வாங்கி அணிந்து கல்லூரிக்கு சென்றேன். ஆனால், பெண்போல அணிந்திருந்த கழுத்து செயின் போன்றவற்றை நான் மாற்றவில்லை.  

நான் அணிந்த உடையால் எனது பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ பிரச்சனை இல்லை. அவர்கள் ஏதும் கேட்கவில்லை. நீங்கள் யார் எனது ஆடை குறித்து கேட்க என்று வாக்குவாதமும் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.