மீண்டும் ஒரு கோர விபத்து; காரில் 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட டெலிவரி பாய்... அதிர்ச்சி சம்பவம்..!!

மீண்டும் ஒரு கோர விபத்து; காரில் 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட டெலிவரி பாய்... அதிர்ச்சி சம்பவம்..!!


A car collided with a motorcycle near a flyover in Noida Sector 14.

நொய்டா செக்டார் 14-ல் உள்ள மேம்பாலம் அருகில் மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியுள்ளது.

புத்தாண்டு அன்று இரவு அஞ்சலி சிங் என்ற பெண் புத்தாண்டு அன்று 10 கிலோமீட்டர் தூரம் காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட செய்தி ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதே போன்ற மற்றொரு நிகழ்வு நொய்டாவில் நடந்ததுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்தவரை சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌஷல் என்பவர் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். புத்தாண்டு இரவு டெலிவரிக்காக சென்றபோது, ​​நொய்டா செக்டார் 14-ல் உள்ள மேம்பாலம் அருகில் அவரது மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியுள்ளது. 

மோதியதோடு காரில் சிக்கி காருடன் சேர்ந்து கௌஷலும் சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். கார் ட்ரைவர் கௌஷலின் சடலத்தைக் பார்த்தவுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கோயிலுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு  அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.