தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன்.. கடித்து குதறிய நாய்.. காப்பாற்ற போராடிய தந்தை..!!

தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன்.. கடித்து குதறிய நாய்.. காப்பாற்ற போராடிய தந்தை....


a-boy-who-was-riding-a-bike-with-his-father-was-bitten

பஞ்சாப்பில் நாய் கடித்து 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.  சிறுவனின் தந்தை நாயுடன் போராடி மகனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தில் உள்ள ஒருவர் அவர் வளர்க்கும் செல்லப்பிராணியான பிட்புல் வகை நாயுடன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தந்தையுடன் பைக்கில் வந்த 13 வயது சிறுவனைப் பார்த்து, பிட்புல் நாய் குரைத்துள்ளது. பின்னர் உரிமையாளரின் பிடியிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடிய நாய், பாய்ந்து சிறுவனை கடிக்கத் ஆரம்பித்தது. இதை பார்த்த சிறுவனின் தந்தை, அவனை காப்பாற்ற போராடினார். இந்நிலையில் நாயின் உரிமையாளர் அந்த நாயை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

ஒருவழியாக சிறுவனின் தந்தை, நாயிடமிருந்து அந்த சிறுவனைக் காப்பாற்றினார். ஆனால், அதற்குள் நாய் சிறுவனின் முகம், காது போன்ற இடங்களில் கடித்துள்ளது. நாய் கடித்து படுகாயமடைந்த சிறுவன் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். சிறுவனின் காதில் காயம் அதிகமாக இருக்கிறது என்றும் மற்றபடி சிறுவன் நலமுடன் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.