அலட்சியத்தால் உயிரை இழக்கத்தெரிந்த மனிதர்.. சரக்கு இரயிலில் அடிபடாமல் தப்பித்த பரபரப்பு காணொளி.!

அலட்சியத்தால் உயிரை இழக்கத்தெரிந்த மனிதர்.. சரக்கு இரயிலில் அடிபடாமல் தப்பித்த பரபரப்பு காணொளி.!


a Bihar Man Escape Railway Track Bahalpur Railway Station Video 

 

இரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க கூடாது, ஓடும் இரயிலில் ஏறவோ/இறங்கவோ கூடாது என்று பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மனிதர்களின் அலட்சியம், அவர்களின் அவசரத்தால் சில விபரீதங்களை நிகழ்கின்றன. 

இந்தியாவை பொறுத்தமட்டில் நம் மக்களின் அவசரத்தால், அவர்கள் இரயில் நிலையங்களில் நடைமேடையில் ஏறி பயணம் செய்ய முடியாமல் அவசர கதியில் தண்டவாளங்கள் மீது ஏறி நடைமேடைகளை கடந்து வருகின்றனர். 

இவ்வாறான செயல்கள் சில தருணங்களில் ஆபத்தான சூழலை சந்திக்க வைக்கிறது. அவ்வகையில், பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூர் இரயில் நிலையத்தில் நடைமேடையை கடக்க விரும்பியவர் தண்டவாளத்தின் வழியே கடக்க முயற்சி செய்துள்ளார். 

ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு இரயில் வந்துவிட, பதற்றத்தில் செய்வதறியாது திகைத்தவர் அப்படியே கீழே படுத்துக்கொண்டார். பின்னர், இரயில் சென்றதும் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பி மேலே வருகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.