ரோட்டில் தடுமாறி விழுந்த 60 வயது ஆசிரியரை.... சரமாரியாக தாக்கிய பெண் காவலர்கள்... வைரலான வீடியோ...!

ரோட்டில் தடுமாறி விழுந்த 60 வயது ஆசிரியரை.... சரமாரியாக தாக்கிய பெண் காவலர்கள்... வைரலான வீடியோ...!


A 60-year-old teacher who stumbled on the road was assaulted by female policemen... viral video...

60 வயதான முதியவரை பெண் போலீசார் இருவர் லத்தியால் அடிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள பர்ஹுலி கிராமத்தில் வசித்து வருபவர் நவல் கிஷோர் பாண்டே(60). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை நவல் கிஷோர் பாண்டே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ரோட்டில் விழுந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கைமூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டதால், அங்கு வேலையில் இருந்த பெண் போலீசார் இருவர் ஆத்திரத்தில், லத்தியால் ஆசிரியர் நவல் கிஷோரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்துள்ளனர்.

இதனால் நவல் கிஷோருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் நாவல் கிஷோர் அலறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முதியவர் என்றும் பாராமல் தாக்கிய பெண் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் மோகன் சர்மா தெரிவித்துள்ளார். போலீசார் இருவரையும் மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.