இந்தியா

98 வயதில் தன்னம்பிக்கையுடன் உழைத்து இளைஞர்களின் ரோல் மாடலாக விளங்கும் தாத்தா.! வைரல் வீடியோ.!

Summary:

உத்தரபிரதேச மாநிலத்தில் 98 வயதிலும் தளராது உழைக்கும் தாத்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் 98 வயதிலும் தளராது உழைக்கும் தாத்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் வசிக்கும் விஜய் பால் சிங், என்ற முதியவர் தனது  98 வயதிலும் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விருப்பம் இல்லை எனக் கூறி, சுயமாக உழைத்து சம்பாதித்துவருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்துவரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பால் சிங்கின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

அவர், ரேபரேலி பகுதியில் தினமும் வேகவைத்த வேர்க்கடலை மசாலா வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார். இவர் விற்பனை செய்துவரும் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வாடிக்கையாளர் ஒருவர், விஜய் பால் சிங்கிடம் உரையாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோவில், வீட்டில் சும்மா இருந்தாலே, மனச்சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். என் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனது செலவுக்கு தேவையான பணத்தை நானே சம்பாதித்துக் கொள்கிறேன் என்று பேசியவாறே பட்டாணி மசாலை தயார் செய்கிறார். இந்தநிலையில் அந்த முதியவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


Advertisement