நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
அடக்கடவுளே இந்த வயசிலேவா.. உணவு இடைவேளையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 வயது சிறுமி.! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்.!!
ராஜஸ்தானில் பள்ளி உணவு இடைவேளையின் போது, அடுத்தடுத்து இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் தண்டா என்ற பகுதியில் ஆதர்ஷ் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 9 வயது நிறைந்த பிராச்சி குமாவத் என்ற சிறுமி 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட தயாரான நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்த சிறுமி
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனே சிறுமியை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்னர். பின் மேல்சிகிச்சைக்காக சிகாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிறுமி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
மாரடைப்பால் மரணம்
மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்த நோயாளி! பெண் மருத்துவரை அடித்து உதைத்த குடும்பத்தினர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....
இதையும் படிங்க: சைடிஸ் இல்லாததால் ஓரமா போன பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞர். வைரல் வீடியோ.