அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
9 வயது சிறுமியை கண்ட இடத்தில் கைவைத்து... தோழியின் மகளுக்கு தோழன் செய்த பெரும் கொடுமை.!
தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம், கள்ளியூர் பகுதி மைத்ரி நகரில் வசித்து வருபவர் ஷிஜோம் (வயது 40). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணுடன் நட்போடு பழகி வந்துள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணும் இவருடன் நண்பராக பழகியுள்ளார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஷிஜோம் அவரது தோழியின் ஒன்பது வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சிறுமி கண்டித்தும், அவர் கேட்காமல் மேலே கை வைத்தது மட்டுமின்றி, தகாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாயாரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்தாக ஷிஜோம் மீது காவல்துறையினரிடம் தாயார் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலடைத்தனர்.